• Sat. Aug 15th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

இந்திய அளவில் சிறந்த 30 பயிற்சியாளர்களில் கோவை இளைஞர் ஜீவா முருகேசன் தேர்வு..,

BySeenu

Aug 15, 2026

கோவையை சேர்ந்த 29 வயதான ஜீவா முருகேசனுக்கு வாடிக்கையாளர்களிடம் பேசுவதும், பொருட்களின் சிறப்பு அம்சங்களை விளக்குவதும் ஒரு காலத்தில் பெரும் சவாலாக இருந்தது. ஆனால் இன்று. இந்தியா முழுவதும் உள்ள 9,400-க்கும் மேற்பட்ட சாம்சங் தோஸ்த் விற்பனைப் பயிற்சியாளர்களில் சிறந்த 30 பேரில் ஒருவராக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த திட்டம் சாம்சங் இந்தியாவின் சமூகப் பொறுப்புணர்வு திட்டமாகும். இது இளைஞர்களுக்குத் தொழில்துறைக்குத் தேவையான திறன்களையும், நடைமுறை வேலை அனுபவத்தையும் வழங்கி, ரீடைல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் வேலைவாய்ப்புக்கு அவர்களைத் தயார்படுத்துகிறது. இத்திட்டம் இந்தியா முழுவதும் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களை மேம்படுத்தியுள்ளது.

கற்பதில் அவர் காட்டிய ஆர்வத்துக்காகவும், தொழில்முறை வளர்ச்சிக்காகவும் குருகிராமில் உள்ள சாம்சங் இந்தியாவின் பிராந்திய தலைமையகத்தில் ஜீவா சமீபத்தில் கௌரவிக்கப்பட்டார்

இது குறித்து ஜீவா கூறுகையில், “ஆரம்பத்தில், என்னால் வாடிக்கையாளர்களிடம் சரியாகப் பேசவோ, பொருட்களைப் பற்றி விளக்கவோ முடியவில்லை அதனால் அவர்கள் சென்றுவிடுவார்கள். என் மேலாளர் என்னைத் திட்டுவார். தோஸ்த் பயிற்சிக்குப் பிறகு, நான் பொருட்களைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டு. வாடிக்கையாளர்களிடம் அது குறித்து தெளிவாக எடுத்துக்கூறி விற்பனையை வெற்றிகரமாக முடிக்கத் தொடங்கினேன். இப்போது. என் மேலாளர் என்னை முழுமையாக நம்புகிறார். நான் ஒரு வாடிக்கையாளரைக் கவனித்தால், கண்டிப்பாக அந்த விற்பனையை முடித்துவிடுவேன் என்று அவர் உறுதியாக நம்புகிறார்.” என்று ஜீவா கூறினார்

சாம்சங் தோஸ்த் விற்பனை மூலம்ஜீவா தனது தகவல் தொடர்புத் திறன், வாடிக்கையாளர்களிடம் ஈடுபாட்டுடன் பழகும் விதம் மற்றும் பொருட்களைச் செய்து காட்டும் திறன் ஆகியவற்றை வளர்த்துக்கொண்டார். இது ரீடைல் கடைகளில் வாடிக்கையாளர்களைக் கையாளும்போது அவருக்கு அதிக நம்பிக்கையைக் கொடுத்தது.

தமிழ்நாட்டில் சாம்சங் தோஸ்த் மூலம் பயிற்சி பெற்று சான்றிதழ் பெற்ற 865 இளைஞர்களில் அவரும் ஒருவர். இந்த ஆண்டு தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட 30 சிறந்த பயிற்சியாளர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 பேர் இடம் பெற்றுள்ளனர் சாம்சங் தோஸ்த் விற்பனை திட்டம் வகுப்பறைப் பயிற்சியோடு சேர்த்து, நேரடி ரீடைல் அனுபவத்தையும் வழங்குகிறது இது இளைஞர்கள் வேலை செய்யும் இடத்தில் நேரடியாகப் பயன்படுத்தக்கூடிய திறன்களை வளர்த்துக்கொள்ள உதவுகிறது.

இந்திய மின்னணுத் துறை திறன் கவுன்சில் மற்றும் தொலைத்தொடர்புத் துறை திறன் கவுன்சில் ஆகியவற்றின் கூட்டணியுடன், பயிற்சியாளர்களுக்கு தொழில் துறையால் அங்கீகரிக்கப்பட்ட என்எஸ்க்யூஎப் தர சான்றிதழ் வழங்கப்படுகிறது. இது அவர்களின் வேலைவாய்ப்பையும் தொழில் தகுதியையும் பலப்படுத்துகிறது.

வாடிக்கையாளர்களிடம் பேசத் தயங்கிய நிலையில் இருந்து, இன்று அதிக தன்னம்பிக்கை கொண்ட ஒரு இளம் ரீடைல் விற்பனையாளராக ஜீவா எவ்வளவு தூரம் முன்னேறி வந்திருக்கிறார் என்பதை இந்த பயிற்சி காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.