நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக தெலுங்கானா மாநில பாஜக எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கானா மாநில பா.ஜனதா எம்.எல்.ஏ. ராஜாசிங். இவர்தான் பேசும் 10 நிமிட வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதில் அவர் நபிகள் நாயகத்தை பற்றி அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ராஜாசிங் எம்.எல்.ஏ.வின் இந்த வீடியோவை கண்டித்து ஐதராபாத்தில் நேற்று இரவு போராட்டங்கள் நடந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு போராட்டம் நடந்தது. அதே போல் ஐதராபாத்தில் மற்ற பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் ராஜாசிங் எம்.எல்.ஏ.வை ஐதராபாத் போலீசார் கைது செய்தனர்.