மின் கட்டணத்தை குறைக்க பரிசீலனை செய்யப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்.கோவை ஈச்சனாரியில் நாளை நடைபெறும் அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதற்காக அங்கு அமைக்கப்பட்டு வரும் மேடை, பந்தல் பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மின்சாரத் துறையில் ஏற்பட்டுள்ள இழப்புகளால் மின் கட்டணம் உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. மின் கட்டண உயர்வு குறித்து சிறுகுறு தொழில் முனைவோர் கோரிக்கை முன் வைத்துள்ளனர். அந்த கோரிக்கைக்கு முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ் விரைவில் தகவல் வெளிவரும். மின் கட்டணத்தை குறைக்க பரிசீலனை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.