• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

இந்திய குத்துச் சண்டை போட்டிக்கு தேர்வாகி உள்ள தேஜா ஸ்ரீ..,

ByK Kaliraj

Oct 30, 2025

விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தின் கீழ் நடைபெற்ற குத்துச் சண்டை போட்டியில் உயிரிதொழில்நுட்பவியல் துறையின் முதலாமாண்டு படித்து வரும் மாணவி தேஜா ஸ்ரீ அவர்கள் முதல் இடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்று அகில இந்திய குத்துச் சண்டை போட்டிக்கு தேர்வாகி உள்ளார்.

இளங்கலைத் தமிழ் இரண்டாமாண்டு படித்து வரும் மாணவி .மணி மாலா அவர்கள் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் பெற்று இருவரும் கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர். குத்துச் சண்டையில் வெற்றி பெற்ற வீராங்கனைகளைக் கல்லூரியின் செயலாளர் அ.பா.செல்வராஜன், இணைச் செயலாளர் ராஜேஷ் மற்றும் கல்லூரி முதல்வர் பாலமுருகன் ஆகியோர் வாழ்த்தினார்கள்.