• Thu. Apr 25th, 2024

நீலகிரி மாவட்ட அரசு தொடக்கப் பள்ளிக்கு தமிழக அரசின் விருது

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மின்வாரிய மேல் முகாமில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிக்கு தமிழக அரசின் சிறந்த பள்ளிக்கான விருது வழங்கப்பட்டது
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மின்வாரிய மேல்முகம் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது எல்கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளியில் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏழு தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் விவசாயிகள் குழந்தைகள் படிக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பத்துக்கும் குறைவான மாணவர்கள் படித்து வந்த நிலையில் தலைமையாசிரியர் ஜெயந்தி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் தீவிர முயற்சியால் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து தற்போது பள்ளியில் 140 மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
போதிய வகுப்பறைகள் இல்லாததால் மாணவர்களுக்கு கல்வி கற்பதில் இடையூறு ஏற்பட்டு வந்தது தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் மாநிலங்கள் உறுப்பினர் ரங்கராஜன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது இதைத்தொடர்ந்து அவர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் 15 லட்சம் ஒதுக்கினார் இதன் மூலம் இரண்டு கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டது இதேபோல கழிப்பிட வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது.
தொலைதூரப் பகுதிகளில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவர்களுக்காக அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம் வாகன வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சீருடை துவங்கி கல்வி கற்பது வரை தனியார் பள்ளிகளை பின்னுக்கு தள்ளி தான் பெரும்பலனான பெற்றோர்களுக்கு தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளை சேர்த்துள்ளனர். இந்த நிலையில் மேற்படி மாணவர் சேர்க்கை சிறந்த கல்வி கற்பித்தல் மாணவர் நலன் போனதால் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 2020 -21 ஆண்டுக்கான தமிழக அரசு சிறந்த தொடக்கப் பள்ளிக்கான விருதுக்கு மின்வாரிய மேல் முகாம் அரசு தொடக்கப்பள்ளி தேர்வு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக ஆடிட்டோரியத்தில் நடந்த விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு தமிழக அரசின் சிறந்த தொடக்கப் பள்ளிக்கான விருதை வழங்கினார். இந்த விருதை பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயந்தி மற்றும் ஆசிரியை சபிதா வட்ட கல்வி அலுவலர் வனிதா ஆகியோர் அமைச்சரிடம் இருந்து பெற்றுக் கொண்டார்கள். சிறந்த பள்ளிக்கான விருது பெற்ற தலைமை ஆசிரியை ஜெயந்தி மற்றும் ஆசிரியர்களை பெற்றோர்கள் ஆசிரியர் கழகத்தின் மற்றும் பொதுமக்கள் மின்வாரியத்தினர் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *