• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கோவையில் சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பின் உதய தின கொடியேற்ற நிகழ்வு..,

BySeenu

Jun 13, 2026

கோவையில் சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பின் 5-ஆம் ஆண்டு உதய தின கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.

​இளைஞர்களின் ஒற்றுமை, உரிமை மற்றும் மாற்றத்தை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பு (Solidarity Youth Movement), தனது வெற்றிகரமான 5-ஆம் ஆண்டில் கால்பதிக்கிறது.​இதனை முன்னிட்டு கோவை கரும்பு கடை பகுதியில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்தில் சிறப்பு உதய தின கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.​மத நல்லிணக்கம்! ஒற்றுமை! | உரிமை! | மாற்றம்! ​”உதயத்தின் அடையாளம், இளைஞர்களின் ஒற்றுமை!” என்ற தாரக மந்திரத்துடன் இந்த கொடியேற்ற விழா நடைபெற்றது.

இளைஞர்களிடையே விழிப்புணர்வையும் ஒற்றுமையையும் ஏற்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் இந்த நிகழ்வு குறித்த கூடுதல் தகவல்களுக்கு, அவர்களது அதிகாரப்பூர்வ இணையதளமான www.solidarityyouthtn.org மற்றும் சமூக ஊடகப் பக்கங்களை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அமைப்பின் நிர்வாகிகள்
மாநிலச் செயலாளர் ஹபீப் ரஹ்மான், டிஸ்ட்ரிக் தலைவர் சாலிடரி சினுஜ் அஹம்த் மற்றும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டனர்.