• Sun. Aug 30th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தமிழக சட்டசபை தேர்தலிலும் மாற்றம் நிகழும் – ஜே.பி.நட்டா

ByA.Tamilselvan

Dec 28, 2022

தமிழக பாராளுமன்ற தேர்தலில் மட்டமல்ல சட்டசபை தேர்தலிலும் மாற்றம் நிகழும் என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசியுள்ளார்.
பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கோவை வந்தார். அவரை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய மந்திரி எல்.முருகன் உள்ளிட்ட பல்வேரு தலைவர்கள் வரவேற்றனர். கோவைப் பொதுக்கூட்டடத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசும்போது..
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா முன்னோக்கிச் சென்று ஒரு பெரிய பாய்ச்சலை எடுத்து வருகிறது. இந்தியா இப்போது பாதுகாப்பான கைகளில் உள்ளது என்று சொல்லலாம். இந்தியா தற்போது வலிமையுடன் முன்னேறி வருகிறது, விரைவில் உலகின் தலைசிறந்த தலைமையாக மாறும். பொம்மைத் தொழிலில் மிகப் பெரிய ஏற்றுமதியாளராக நாம் இருந்து வருகிறோம். ரசாயனத் துறை, மருந்துத் துறையிலும் நாம் சிறப்பாகச் செயல்படுகிறோம் என்பதைக் குறிப்பிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
பாராளுமன்ற தேர்தல் மட்டுமின்றி தமிழக சட்டசபை தேர்தலிலும் மாற்றம் நிகழும். நம்பிக்கையான முன்னேற்றத்தை பார்த்துக் கொண்டே இருக்கின்றோம். யாரும் பட்டினியாக இருக்கக்கூடாது என்பதற்காக அன்னை யோஜனா திட்டத்தைக் கொண்டு வந்தோம். விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்தியாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் கொரோனா தடுப்பூசிகளை உலகம் வியந்து பாராட்டியுள்ளது என தெரிவித்தார்.