• Tue. Aug 11th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

ஆந்திரா அமைச்சருக்கு தமிழ் திரையுலகினரின் பாராட்டு விழா!

ஆந்திராவில் சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சராக நடிகை ரோஜா சமீபத்தில் பதவியேற்றுக்கொண்டார். தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா. இயக்குனர் ஆர் கே செல்வமணியை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டார். மேலும், ஆந்திராவில் அரசியலிலும் ஈடுபட்டார். சமீபத்தில் YSR காங்கிரஸ் வெற்றி பெற்று ஆந்திராவில் ஆட்சி நடத்தி வருகின்றது. இதில் ரோஜாவும் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். இந்நிலையில் தற்போது ஜெகன் மோகன் ரெட்டி அமைச்சரவையை மாற்றியுள்ள நிலையில் ரோஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆந்திர அரசின் கலாச்சார, சுற்றுலாத்துறை அமைச்சராக ரோஜா செல்வமணி பொறுப்பேற்றுள்ளதை அடுத்து பாராட்டும் விதமாக, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர்கள் சங்கம், இசையமைப்பாளர்கள் சங்கம் ஆகியவற்றின் ஆதரவோடு தென்னிந்திய திரைத்துறையினர் இணைந்து இயக்குநர் இமயம் பாரதிராஜா தலைமையில் மே 7 ஆம் தேதி அமைச்சர் ரோஜாவுக்கு பாராட்டு விழா நடத்தவுள்ளனர். இதில் தமிழ் திரையுலகின் முன்னணிக் கலைஞர்கள் பலரும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.