தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக தி.மு.க இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பொறுபேற்றுள்ளார்.இதனை முன்னிட்டு நீலகிரி மாவட்ட மஞ்சூர் கீழ்குந்தா பேரூராட்சிக்கு உட்பட்ட தி.மு.க சார்பில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.மஞ்சூர் பஜார் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் டி கே எஸ் பாபு தலைமையில் ,பேரூர் கழக செயலாளர் சதீஷ்குமார் ,பேரூர் கழக துணை துணைச் செயலாளர் சத்யநாராயணன் சிவக்குமார், முன்னாள் சிறுபான்மையினர் தலைவர் சின்னான், அவைத் தலைவர் மாடக்கண்ணு, பேரூராட்சி மன்ற தலைவர் சத்தியவாணி, மாவட்ட பிரதிநிதி ஈஸ்வரன் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பட்டாசு வெடித்து கழக கொடியேற்றி இனிப்பு வழங்கி கொட்டும் மழையும் பொருட்படுத்தாமல் குடை பிடித்தவாறு கொண்டாடப்பட்டது.
திமுகவைச் சேர்ந்த ஆறுமுகம் ராஜூ, மோகன்தாஸ் ஆல்துரை ராஜமணி முஸ்தபா, பேரூராட்சி கவுன்சிலர்கள் காஞ்சனா தீபா சண்முகம், இளைஞர் அணியைச் சேர்ந்த லூயி அஜித், பிரபு மாணிக்கம், கனகராஜ், பிரகாஷ், சுப்பிரமணி ரவி விஜயகுமார், சசி ஸ்ரீதர், பழனிசாமி, ஜெயராம், சின்னவர் சந்திரன் ,மணி சந்திரன், சங்கிலி குமார் வினோத் புண்ணியன் அறிவழகன் என திமுக கூட்டணி கட்சியினர் என பலர் கலந்து கொண்டனர்