

மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு மங்கைநல்லூரில் தி.மு.க வினர் நலத்திட்டம் வழங்கி இந்தியை எதிர்த்து உறுதிமொழியேற்றுக் கொண்டனர்.

மயிலாடு துறை மாவட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. குத்தாலம் ஒன்றியம் மங்கைநல்லூரில் திமு..க கிழக்கு ஒன்றியம் சார்பாக மங்கை சங்கர் தலைமையில் தி.மு.க வினர் இனிப்பு வழங்கி பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி இந்தி மொழி திணிப்பை எதிர்த்து உறுதிமொழி எடுத்துக் கொன்டனர். செம்பனார் கோயில் பகுதியில் தி.மு.க வடக்கு ஒன்றிய கழக செயலாளர் பி. எம். அன்பழகன் தலைமையில் இனிப்பு வழங்கி இந்தி தினிப்பை எதிர்த்து, உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வாயிலில் தி.மு.க. வழக்கறிஞர்கள் கூடி, மூத்த வழக்கறிஞர் எம்.பி.எம்.பாலு தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி இளம் வழக்கறிஞர்களுக்கு சட்ட நூல்களை வழங்கினர். கூறைநாடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகப்பேறு பெண்களுக்கு நகர செயலாளர் குண்டா மனி(எ) செல்வராஜ் தலைமையில் தி.மு.க.வினர் ஊட்டசத்து பொருட்கள் வழங்கி மரக்கன்றுகள் வழங்கி, இந்தி திணிப்பை எதிர்த்து உறுதிமொழி எடுத்து கொண்டனர் இதில் ஏராளமான தி.மு.க.வினர் கூடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்க என்று முழக்கமிட்டனர்

