• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

எஸ்.பி.ஐ.க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

Byவிஷா

Mar 18, 2024

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் வெளியிடுமாறு, உச்சநீதிமன்றம் எஸ்.பி.ஐ வங்கிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, தேர்தல் பத்திர எண்களை மார்ச் 21ஆம் தேதி, மாலை 5 மணிக்குள் தேர்தல் பத்திரம் வாங்கிய தேதி, பெயர், சீரியல் எண்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என எஸ்பிஐக்கு இன்று உத்தரவிட்டுள்ளது. இந்த விவரங்களை தேர்தல் ஆணையம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.