• Fri. Jan 24th, 2025

அதிமுக கொடி, சின்னம் வழக்கில் இன்று தீர்ப்பு

Byவிஷா

Mar 18, 2024

அதிமுக கொடி, சின்னம் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகிறது.
அதிமுக-விலிருந்து இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வருவது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியதால், இவற்றை பயன்படுத்த ஒபிஎஸ் அணியினருக்கு தடை விதிக்க கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமார், கட்சியின் பெயர், சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஒ.பி.எஸ்-க்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து ஒ.பி.எஸ். சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்நிலையில் அதிமுக கொடி, சின்னம், கட்சி பெயர் ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படுகிறது. சென்னை உயர் நீதிமன்றம் பிற்பகல் 2.15 மணிக்கு தீர்ப்பளிக்கிறது.