


தேனி மாவட்டம் கூடலூர் அருள்மிகு கூடல் சுந்தரவேலவர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தேனி மாவட்டம் கூடலூரில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற அருள்மிகு கூடல் சுந்தரவேலவர் திருக்கோவில். இக்திருக்கோவிலில் ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை உடனுறை ஸ்ரீ சுந்தரவேலப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இக்கோவிலில் கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

கடந்த வெள்ளிக்கிழமை மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி வேள்வி ஹோமம், பூர்ணாஹுதி அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் நவகிரக ஹோமம், சுதர்சன ஹோமம், வாஸ்து பூஜை வாஸ்து சாந்தி முதல் கால பூஜைகள் உள்ளிட்டவைகள் நடைபெற்றது அதனை தொடர்ந்து, இரண்டாம் கால பூஜைகள், அணுக்கை, கணபதி பூஜை, மகா சங்கல்பம், புண்ணியாக வாசகம், தீப பூஜை உள்ளிட்டவை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மூன்றாம் கால யாகசாலை பூஜைகளும் நடைபெற்றது.

பின்னர் இன்று காலை நான்காம் கால யாக பூஜைகள் துவங்கி பஞ்சகாவிய பூஜை, சுத்தி பிம்மா சுத்தி, பிராண பிரதிஷ்டை, பிம்ப ரக்ஷாபந்தனம் உள்ளிட்ட யாகசாலை பூஜைகள் நடைபெற்று மகாபூர்ணா ஹுதி நடைபெற்றது. அதன் பின்பாக ஜீவ கும்ப புறப்பாடு நடைபெற்று, ராஜகோபுர விமான கும்பாபிஷேகம், மூலஸ்தான மகா கும்பாபிஷேகம், அதனைத் தொடர்ந்து பரிவார தெய்வங்களின் கும்பங்களுக்கும் புனித நீர் கொண்டு கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பின்னர் கும்பத்திற்கு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கும்பத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்ட தண்ணீர் கொண்டு பக்தர்களுக்கு தீர்த்தவாரி தெளிக்கும் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ச்சியாக ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை சமேத சுந்தர வேலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வண்ண மலர்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சுந்தரவேலவர் ஸ்ரீ வள்ளி தெய்வானையுடன் மலர்அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்த கும்பாபிஷேக நிகழ்வில் கூடலூர், கம்பம், சுருளிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்து சென்றனர். கும்பாபிஷேக நிகழ்வை முன்னிட்டு அனைவருக்கும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

