நானே ராஜா… எம்.பி சொன்னா குழாய் போடணுமா? இருந்த குழாயையும் புடுங்கி எறிய சொன்ன பழனிசெட்டிபட்டி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தியின் அடாவடித்தனத்தால் திமுகவினரும், அப்பகுதி பொதுமக்களும் கொதித்து போய் உள்ளனர்.
தேனி பழனிசெட்டிபட்டி பிரச்னை விவகாரம்… தூங்குகிறதா மாவட்ட நிர்வாகம்? ஆகிய தலைப்புகளில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நமது “அரசியல் டுடே” இணையதளங்களில் தொடர்ச்சியாக தேனி பழனிசெட்டிபட்டி பேரூராட்சி சேர்மன் மிதுன்சக்கரவர்த்தியின் அடாவடி பற்றி செய்திகளாகவும், வீடியோக்களாகவும் வெளியிட்டிருந்தோம். நமது அரசியல் டுடே இணையதள செய்தியைக் கண்ட தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் கடந்த 29.03.25 அன்று பழனிசெட்டிபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பிரச்னைக்குரிய இடமான சுகதேவ் தெருவில் ஆய்வு செய்தார். அப்போது அந்த தெருவில் பாதிவரை சிமென்ட் ரோடு போட்டு நிறுத்தியதும், தெருக்குழாய் இணைப்பு துண்டிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளான பேரூராட்சிகளின் இணை இயக்குனர் கிறிஸ்டோபர்தாஸ், பழனிசெட்டிபட்டி பேரூராட்சியின் செயல் அலுவலர் ஜெர்ஸி ரோஸ்லின் அன்புராணி ஆகியோரை நேரில் வரவழைத்து, மக்களுக்காகத்தான் அரசாங்கம். நீங்க எல்லாம் அதிகாரிகள் என்ற போர்வையில யாருக்கு வேலை பார்க்கிறீங்க-? உங்கள மாதிரி ஆளுகளால கட்சிக்கும் ஆட்சிக்கும் கெட்ட பெயர்…மக்களுக்காக வேலை பாருங்க. இரண்டு தினங்களுக்குள்ள துண்டிக்கப்பட்ட பைப்பும் போட்டுருக்கனும். இந்தப் பகுதியில ரோடும் போட்டு முடிச்சிருக்கனும் என அதிகாரிகளை எச்சரித்து விட்டு சென்றார். ஆனா எம்.பி தங்கதமிழ்ச்செல்வன், அதிகாரிகளை எச்சரித்து விட்டு சென்று ஒரு வாரத்திற்கு மேலாகியும் இன்று வரை சொல்லிச் சென்ற வேலை எதுவும் நடைபெறவில்லை என்று தேனி பழனிசெட்டிபட்டி யிலிருந்து நம் அலுவலகத்திற்கு அவலக்குரலாக தகவல் வர உடனே அங்கு ஆஜரானோம்.
தேனி எம்.பி யின் ஆய்வும், அதிகாரிகளின் நடவடிக்கைகள் குறித்தும் பேசிய வழக்கறிஞர் கண்ணதாசன் ..,
கண்ணதாசன்
“எம்.பி வந்து சம்மந்தப்பட்ட இடத்தை நேரில்பார்த்ததும், ஆஹா.. எம்பியே நேர்ல வந்து பாத்து சொல்லீட்டார்ல.. ரெண்டுநாள்ல ரோடும் வந்துரும், கட் பண்ணுன குழாயும் வந்துரும்னு சந்தோஷப்பட்டோம்.. ஆனா எதுவும் நடக்கல.எங்க ஊர் பொறுத்த அளவில் சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி வைத்தது தான் சட்டம். எம்.பி குழாய்க்கு கனெக்ஷன் குடுக்கச் சொன்னதால இப்ப அந்த குழாயை சேர்மன் உத்தரவில் பேரூராட்சி ஊழியர்கள் பிடுங்கி எடுத்துச் சென்று விட்டார்கள். எடுத்து செல்லுறப்ப கேட்டால் சேர்மன் உத்தரவு குழாயை எடுத்துட்டு மட்டும் வரச் சொன்னாரு …வேறு எதுவும் எங்களுக்கு தெரியாது! எதுவா இருந்தாலும் சேர்மன் கிட்ட கேட்டுக்கங்க என்று சொல்லிட்டு போயிட்டாங்க … உடனே சேர்மன் கிட்ட போய் கேட்ட.., “எம்பி கிட்ட சொல்லீட்டீங்கள்ல.. வேலை நடக்கும் போய்ட்டு வாங்க எல்லோரும் என மூஞ்சில அடிக்கிற மாதிரி சொல்லிட்டாரு”. எங்க ஊரை பொறுத்தவரை இங்கு நானேராஜா, நானே மந்திரிங்கிறது சேர்மன் மிதுன் சக்கரவர்த்திதான். இவரை பகைத்துக்கொள்ள பயந்து அதிகாரிகளும் மௌனமாய் இருக்கிறார்கள். எம்பி என்ன? யார் வந்து சொன்னாலும் இவரை கேட்கப்போவதில்லை, இது எங்கள் தலையெழுத்து.. ஆண்டவரிடமும் சொல்லிவிட்டோம்… ஆள்பவர்களிடமும் சொல்லிவிட்டோம்…இனி இவர்களுக்கு எதிராக ஊரே ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்த வேண்டியது தான் பாக்கி” என்றார் கண்ணதாசன் வேதனையாக .
செல்வராஜ்
மேலும் இது குறித்து பழனிச்செட்டிபட்டி திமுக பேரூர்செயலாளர் செல்வராஜ் இடம் கேட்ட போது..,
“சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி செய்யும் அடாவடிகள் குறித்து கட்சி மேலிடத்திலும் தெரியப்படுத்தி உள்ளோம். தேனி கலெக்டர் கிட்டயும் புகார் கொடுத்துள்ளோம். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எங்க அண்ணன் எம்.பி தங்க தமிழ்ச்செல்வன் நேரில் வந்து பிரச்சனைக்குரிய இடத்தை நேரடியாக பார்வையிட்டு சென்றார்கள். பேரூராட்சியின் ஏடி, செயல் அலுவலர் போன்றவர்கள் ஓய்வு பெறும் நிலையில் இருப்பதால் அவர்களை கோர்ட்டு, கேஸ் என இழுத்தடிப்பேன் என்று மிதுன் சக்கரவர்த்தி மிரட்டுவதால் அவர்கள் சேர்மன் மீது நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள். பொதுமக்களுக்கு இவ்வளவு அக்கிரமங்கள், இடையூறுகள் செய்யும் மிதுன் சக்கரவர்த்தி அதிகாரத்தை தட்டி கேட்க நாதி இல்லை. அதிகாரிகளும், அலுவலர்களும் சேர்மனுக்கு பயத்தால சப்போர்ட்டாக இருக்கிறாங்க. இணைப்பு துண்டிக்கப்பட்ட தெருக் குழாய்க்கு இரண்டு நாளில் இணைப்பு வழங்க எங்க அண்ணன் எம்.பி உத்தரவிட்டு போன மறுநாளே, தெருக்குழாய் இருந்த அடையாளமே தெரியாமல் பிடுங்கி எடுத்துச் சென்றார்கள்.. இங்கு எம்.பி பேச்சுக்கு மரியாதை இல்லை.எம்.பி தங்க தமிழ்ச்செல்வன் கூஜா.., நான் தா ராஜா என ஊருக்குள் எங்க கட்சிக்காரங்க கிட்டேயே பேசி வராரு மிதுன் சக்கரவர்த்தி.மேலும் 8வது வார்டுல குறிப்பிட்டு ஒரு தெருவே குறி வச்சு ஆக்கிரமிப்பு இருப்பதா உருவாக்குன புகார்தாரர் வேற யாருமில்லை சேர்மன் ஒட வலது கை மாமா இளையராஜா தான் இந்த கொடுமையை எங்க போய் சொல்ல ஊருகே தெரியும். நானே நொந்து போய் இருக்கிறேன்” என்றார் வேதனையாக.
இவர்களது குற்றச்சாட்டுகள் குறித்து தேனி பழனிசெட்டிபட்டியின் சேர்மன் மிதுன் சக்கரவர்த்தியை தொடர்பு கொண்டோம்.., நம் தொடர்பு தொடர்ந்து துண்டிக்கப்படவே
கிறிஸ்டோபர் தாஸ்
மேலும் இது குறித்து, தேனி மாவட்டத்தின் பேரூராட்சிகளின் இணை இயக்குநர் கிறிஸ்டோபர் தாஸ்யை தொடர்பு கொண்டு பேசினோம்..,
“பழனிசெட்டிபட்டி விவகாரம் எனக்கு ஒரே தலைவலியா இருக்கு.நான் சேர்மன் சொல்றத கேக்குறதா? எம்.பி சொல்றத கேக்குறதா?நான் லீவு போட்டு போக போறேன்” என்றார் படபடப்பாக.
இந்த பிரச்சனையை முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என முடிவெடுத்து இது குறித்து தேனி நாடாளுமன்ற தொகுதி எம்.பி.தங்க தமிழ்ச்செல்வன் அவர்களை தொடர்பு கொண்டு பேசினோம்..,
தங்க தமிழ்ச்செல்வன்
“சம்பந்தப்பட்ட அந்த தெருவுக்கு நானே நேரில் சென்று பார்வையிட்டேன். தெருவில் அரைகுறையாக போடப்பட்டிருந்த சிமெண்ட் சாலையையும், இணைப்பு துண்டிக்கப்பட்ட குடிநீர் குழாய்யையும் இரண்டு நாளில் சரி செய்து கொடுக்க வேண்டும் என அதிகாரியிடம் சொல்லிவிட்டு வந்தேன், இன்னும் வேலை செய்து முடிக்கவில்லையா ? என்றவரிடம்,
நீங்கள் சொல்லிவிட்டு வந்த பின்பு தான் அந்த தெருக்குடிநீர்குழாய் இருக்கிற இடமே தெரியாமல் பிடுங்கிக் எடுத்து சென்று விட்டார்கள் என்றதும், என்ன குழாய் பிடுங்கி எடுத்து சென்று விட்டார்களா?
“இப்ப நான் ஏடி கிட்ட பேசுறேன் என்றவர், இதற்கு சரியான தீர்வு கிடைக்காமல் விடமாட்டேன், இந்த பிரச்சனையை நானே களத்தில் இறங்கி முடித்து வைக்கிறேன்” என்று தங்க தமிழ்ச்செல்வன் உத்வேகத்துடன் பேசினார்.
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை
இந்த குறளை தேனி பழனிசெட்டிபட்டி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி படிக்க வேண்டும் என்பதுதான் பொதுமக்களின் கருத்து.
தேனி மாவட்டம் கூடலூர் வடக்கு காவல் நிலையத்தில் பெண் தலைமை காவலராக பணிபுரிந்தவர் முத்துமீனாட்சி. இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவர் 2003 ஆம் ஆண்டு பேட்ச்யில் காவலர் பயிற்சி பெற்று காவலரானவர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக உடல் நல குறைபாட்டின் காரணமாக முத்து மீனாட்சி உயிரிழந்தார். இதனை அடுத்து 2003 ஆம் ஆண்டு தமிழக முழுவதும் சுமார் 1300 பேர் இவருடன் பயிற்சி பெற்றவர்கள் .இவர்கள் தோழிகள்… Read more: உயிரிழந்த பெண் தலைமை காவலர் குடும்பத்திற்கு தோழிகள் 2003 பேட்ச் சார்பில் ரூ 13 லட்சம் நிதி உதவி..,
வரலாற்று ஆய்வுத் துறையில் ஆற்றிய வாழ்நாள் பங்களிப்புக்காக தென்னிந்திய வரலாற்றுப் பேரவை (South Indian History Congress) சார்பில், 2026ஆம் ஆண்டுக்கான கஸ்தூரி மிஸ்ரா நினைவு SIHC சிறப்பு மேன்மை விருது வரலாற்று அறிஞர் ராஜய்யனுக்கு வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. இந்திய வரலாற்று ஆய்வுத் துறையில் சிறப்புமிக்க பங்களிப்புகளை வழங்கிய மூத்த வரலாற்று அறிஞர் பேராசிரியர் கே. ராஜய்யனுக்கு, தென்னிந்திய வரலாற்றுப் பேரவை (South Indian History Congress) சார்பில், 2026ஆம் ஆண்டுக்கான கஸ்தூரி மிஸ்ரா நினைவு SIHC… Read more: சிறந்த வரலாற்று அறிஞர் பேராசிரியர் கே. ராஜய்யனுக்கு தென்னிந்திய வரலாற்றுப் பேரவை விருது!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சூலப்புரம் கிராமத்தில் அருகே அமைந்துள்ள சுமார் 2000 -ம் அடி உயரமுள்ள மலையில் பழமையான கரட்டு பெருமாள் கோவில் அமைந்துள்ளது., இக் கோவில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி கடைசி சனிக்கிழமை முன்னிட்டு கிராமத்து சார்பில் வழிபாடு செய்வது வழக்கமாகக் கொண்டுள்ளனர்., இந்த நிலையில் இன்று பெரிய அண்டாக்களில் உணவுகள் சமைத்து பெருமாள் சாமிக்கு பூஜைகள் செய்தனர்., மேலும் தண்ணிருக்காக மலையில் உள்ள கரட்டு பெருமாள் கோவில் அருகில் உள்ள பாறையில் வற்றாத… Read more: பொதுமக்கள் சமூக ஒற்றுமைக்காகவும் மழை வேண்டியும் பாறையில் உண்டு வினோத வழிபாடு…,
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் அமைந்துள்ள பழமையும், ஆன்மிகச் சிறப்பும் வாய்ந்த யோக நரசிங்கப் பெருமாள் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கவும், கோவில் வளாகத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா தெரிவித்துள்ளார். சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகக் கருதப்படும் இக்கோவில், உத்தமபாளையம் பகுதியின் முக்கிய ஆன்மிகத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோவிலில் ராஜகோபுரம் அமைக்க வேண்டும் என்றும், கோவிலின் தரைத்தளத்தை மேம்படுத்த வேண்டும் என்றும் பக்தர்கள் நீண்டகாலமாக… Read more: உத்தமபாளையம் யோக நரசிங்கப் பெருமாள் கோவிலில் ராஜகோபுரம் அமைக்க நடவடிக்கை..,
தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா சின்னமனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், விவசாய பெருமக்கள் தினமும் பயன்படுத்தும் முக்கிய பேருந்து நிலையம் இது. இந்த பேருந்து நிலையம் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆட்சிக் காலத்தில் திறந்து வைக்கப்பட்டது. அதற்கான கல்வெட்டும் அங்கு வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2026 சட்டமன்ற தேர்தலின் போது, தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி, அந்த கல்வெட்டு செய்தித்தாள் கொண்டு முறையாக மறைக்கப்பட்டது. ஆனால், தேர்தல்… Read more: கல்வெட்டை மறைத்த பேப்பர் 4 மாதமாக அகற்றப்படாதது ஏன்? நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
வெற்றிப்பயணம் பேருந்து தொடங்கப்பட்ட நாட்களில் இருந்து தொடர் சர்ச்சையில் சிக்கும் தமிழக அரசு பேருந்துகள் மதுரை புதூர் டிப்போவை சேர்ந்த டிஎன் 58 என்2871 புதூர் டிப்போவை சேர்ந்த இந்த பேருந்து 66 வழித்தடத்தில் இயங்குகிறது. இது பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து திருவாதவூர் வழியாக செல்லக்கூடிய பேருந்து அவுட் போஸ்ட் பேருந்து நிறுத்தம் வரும்பொழுது சுமார் 100 மீட்டர் தள்ளி பேருந்தை நிறுத்தியதுடன் பயணிகளை ஏற்றாமலும் ஓட விட்டும் ஓட்டுநர் நடத்துனரும் அஜாக்கிரதையாக செயல்பட்டது. இதில் வயதான… Read more: முதியோர்களை ஓட விடும் ஓட்டுநரும் நடத்துனர்களும்..,
கோவை மாவட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்தில் அமைந்துள்ள சாடிவயல் யானைகள் முகாம், பொதுமக்கள் பார்வைக்காக நேற்று திறக்கப்பட்டது.வன உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. முகாம் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு வருகை தந்த பொதுமக்கள் யானைகளை நேரில் கண்டு மகிழ்ந்தனர். யானைகளுக்கு உணவு வழங்குவதையும், அவற்றின் செயல்பாடுகளை ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர். யானைகளை அருகில் இருந்து பார்ப்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உற்சாகமான அனுபவமாக… Read more: பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்ட சாடிவயல் யானைகள்..,
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த திடீர் கனமழையால் ஓடைகளில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் செங்கல் சூளைகளுக்குள் புகுந்தது. இதனால், அங்கு காயவைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான செங்கற்கள் தண்ணீரில் கரைந்து நாசமடைந்துள்ளதால், தொழிலாளர்களும் உரிமையாளர்களும் கடும் பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளனர். ஆண்டிப்பட்டி அருகே உள்ள தெப்பம்பட்டி, பாலக்கோம்பை, ராஜக்காள்பட்டி மற்றும் சொக்கலிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் பத்துக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இந்த மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. நேற்று மாலை… Read more: திடீர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள செங்கல் சூளை உரிமையாளர்கள்…
கோவை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில், மருதமலை மற்றும் அதனைச் சுற்றி உள்ள கிராமப் பகுதிகளில் நேற்று பெய்த கன மழையால் சுப்பிரமணிய சுவாமி கோயில் படிக்கட்டுப் பாதையில் மழைநீர் அருவி போல் பெருக்கெடுத்து ஓடியது. மருதமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை திடீரென மேகமூட்டம் ஏற்பட்டு, இடைவிடாமல் ஒரு மணி நேரத்திற்கு மேலாகக் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்தத் திடீர் கனமழையின் காரணமாக,… Read more: மருதமலையில் அருவி போல் கொட்டிய கன மழை..,