

1-9ஆம் வகுப்புகளுக்கு மே 14 முதல் ஜூன் 12 வரை கோடை விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
விடுமுறைக்குப் பின் ஜூன் 13ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என தெவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூன் 23ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று முதல் பிளஸ் 2, பிளஸ் 1, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியாவில் இந்தாண்டு வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தமிழகத்தில் 14 இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகியுள்ளது. இதற்கிடையே, வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
