சபரிமலையில் வைகாசி மாத பூஜையில் பக்தர்களின் தரிசனத்திற்காக முன்பதிவு தொடங்கியுள்ளது. 15ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தரிசனம் செய்து கொள்ளலாம். மேலும் வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை வருகின்ற 14ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கிறது. 15ஆம் தேதி அதிகாலை முதல் 19ஆம் தேதி இரவு வரை பூஜைகள் நடைபெறும். இந்த நாட்களில் பக்தர்கள் தரிசனம் செய்து கொள்ளலாம். அதற்கான ஆன்லைன் முன்பதிவு https:// sabarimalaonline.org என்ற இணைய தளத்தில் நேற்று தொடங்கியுள்ளது. மேலும் நிலக்கல்லில் ஸ்பாட் புக்கிங் வசதி செய்யப்பட்டிருக்கிறது.