• Fri. Apr 19th, 2024

100 டிகிரியை தொட்ட கோடை வெயில்..!

Byகாயத்ரி

Mar 23, 2022

தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தொட்டுள்ளது.

சென்னையில் கோடைகாலம் துவங்கி மார்ச் மாதத்தில் பகல் நேர வெப்பநிலை சராசரியாக 32.9 டிகிரி இருக்கும். ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 22ஆம் தேதி அதிக வெப்பம் கொண்ட நாளாக பதிவாகியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கம் ஆகிய வானிலை நிலையங்களில் பகல்நேர வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவிற்கு (38 டிகிரி) பதிவாகியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மார்ச் மாதத்தில் இது போல இரண்டுமுறை மட்டுமே பதிவாகியுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி 38.3 டிகிரி வெயில் பதிவானது. இந்நிலையில், மதுரை விமானநிலையத்தில், 40.2 டிகிரி செல்சியல் (104 ஃபாரஹீட்) வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதேபோல தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரித்தே காணப்பட்டது. வெயிலின் தாக்கம் அதிகரித்திருப்பதால், மக்கள் குளிர்ச்சியை தேடிச் செல்கின்றனர். இதனால், குளிர்ச்சியை தர கூடிய தர்பூசணி, மோர், குளிர்பானங்கள் மற்றும் பழங்களின் விற்பனை அதிரிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *