• Sun. Jul 20th, 2025
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.56 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.27 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.28 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (1)
previous arrow
next arrow

ரவுடி படப்பை குணாவுக்கு 340 நாட்கள் சிறை…

ஸ்ரீபெரும்புதூர் தாலுகா மதுரமங்கலம் கிராமத்தை சேர்ந்த குணசேகரன் (எ) படப்பை குணா. இவர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, கொள்ளை மற்றும் அடிதடி வழக்குகளில் சம்மந்தப்பட்ட சுங்குவார்சத்திரம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியாவார்.

தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதால் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்திக்கு காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி சுதாகர் பரிந்துரை செய்தார். இதையடுத்து, ஓராண்டு தடுப்பு காவலில் வைக்க கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார். அதனால், காவலில் இருந்து வந்த குணா, ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்ட செயல்துறை நடுவரிடம் அளித்திருந்த நன்னடத்தை உறுதிமொழி கட்டுப்பாடு ஆவணத்தை மீறியுள்ளார். மேலும் குற்றத்திற்காக 340 நாட்கள் சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டது.