

தனியார் பள்ளிகள் உறுதிமொழி சான்று அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தனியார் பள்ளிகள் உறுதியளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறைக்கு வெளியே நிறுத்தக்கூடாது என தனியார் பள்ளிகளுக்கு ஏற்கனவே தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில், உத்தரவு முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து தனியார் பள்ளிகள் உறுதிமொழி சான்றிதழ் அளிக்குமாறு பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டுள்ளது. மேலும், மாணவர்களின் பெற்றோரை தரக்குறைவாக பேச கூடாது என்றும் தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.