ஈரோடு மாவட்டம் கோபி மொடச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் வயது 37. இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். அதே பகுதியில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 22 ஆம் தேதி வீட்டை விட்டு சென்றவர் திரும்ப வரவில்லை. அவரை குடும்பத்தினர் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் கடந்த 23ம் காலை 9 மணி அளவில் அலங்கியம் எல்.பி.பி வாய்க்கால் பகுதியில் ஆண் பிணம் மிதந்து வருவதாக அப்பகுதிக்கு துணி துவைக்க வந்த நபர்கள் தகவல் கொடுத்துள்ளனர்.
அதன் அடிப்படையில் சென்று பார்த்த நம்பியூர் போலீசார் பார்த்தபோது மேற்படி இறந்த நபர் கோபி, மொடச்சூர் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பது தெரியவந்தது.
அதனை தொடர்ந்து நம்பியூர் போலீசார் எஸ்.ஐ. பொன்னுச்சாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
தற்கொலைக்கு தூண்டியது இந்நிலையில் கோபி சின்ன மொடச்சூர் பகுதியைச் சேர்ந்த பரமேஸ்வரன் வயது 42 என்பவரை விசாரணை செய்ததில் கடைசியாக தமிழ்செல்வனிடம் 7 முறை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
பரமேஸ்வரனுக்கு திருமணம் ஆகி இரண்டு மகள்கள் உள்ளனர். அவர் திருப்பூரில் உள்ள லாரி கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
இந்த வழக்கில் பரமேஸ்வரனின் மனைவியை தமிழ்ச்செல்வன் தகாத உறவுக்கு அழைத்ததாக கூறப்படுகிறது இதில் ஆத்திரம் அடைந்த பரமேஸ்வரன் செல்போனில் தமிழ்ச்செல்வனை உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி தற்கொலைக்கு தூண்டி உள்ளதாக நம்பியூர் போலீசார் பரமேஸ்வரன் மீது வழக்கு பதிவு செய்தனர். பரமேஸ்வரன் 15 நாள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.