தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு குழு சார்பாக தர்மபுரி நகரப்பகுதி மற்றும் இலக்கியம்பட்டி பகுதியில் உள்ள பாஸ்ட் புட் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் பானுசுதா தலைமையில் ஆய்வு நடைபெற்றது. இதில் சுமார் 50 கிலோ அளவில் காலாவதியான கோழி மற்றும் ஆட்டு இறைச்சி மசாலா பொருட்கள் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பட்டது.
காலாவதியான பொருட்களை வைத்து இருந்த ஹோட்டல் உரிமையாளர்களுக்கு சுத்தமாகவும், சுகாதாரமாகவும், வாடிக்கையாளர்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்று உணவு பாதுகாப்பு அலுவலர் மூலம் அறிவுரை வழங்கப்பட்டது.
இந்த ஆய்வில் நந்தகோபால், குமணன், நாகராஜ் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் உடனிருந்தனர்…