ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் சார்பில் எழுந்தமிழ் விருதுகள் வழங்கும் விழா கோவை அவிநாசி சாலையில் உள்ள இந்திய தொழில் வர்த்தக சங்க அரங்கில் அரங்கில் நடைபெற்றது.

விழாவிற்கு ரூட்ஸ் நிறுவனங்களின் இயக்குநரும், சிந்தனை கவிஞருமான டாக்டர் கவிதாசன் தலைமை தாங்கினார். சரவணம்பட்டி கவுமார மடாலயத்தின் இராமநாத குமரகுருபர சுவாமிகள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு அருளுரை வழங்கினார்.
விழாவில் பல்வேறு துறைகளில் தமிழ் தொண்டாற்றி வரும் 7 முக்கிய சாதனையாளர்களுக்கு மாமணி விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதில்
ஆன்மீகத்தமிழ் மாமணி விருதை இராமநாத குமரகுருபர சுவாமிகள், இயற்றமிழ் மாமணி விருதை கோவை கிருஷ்ணா, இசைத்தமிழ் மாமணி விருதை பா. அருள்மொழி,
நாட்டியத்தமிழ் மாமணி விருதை சங்கீதா பிரகாஷ், அறிவியல்தமிழ் மாமணி விருதை பி.ஜி கவிதா, ஊடகத்தமிழ் மாமணி விருதை சோலை தமிழினியன், நாடகத்தமிழ் மாமணி விருதை ராஜசேகரன் ஆகியோர் பெற்றனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை ரோட்டரி கிளப் தலைவர் டாக்டர் சித்ரா மனோகர், செயலாளர் டாக்டர் டி பீனா மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் ஆகியோர் செய்திருந்தனர். விழாவில் பொதுமக்கள், ரோட்டரி உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



