• Sat. Apr 20th, 2024

ரிசல்ட் வெளியாகும் தேதி திடீர் மாற்றம்

ByA.Tamilselvan

Jun 16, 2022

10-ம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் ஜூன் 17-ம் தேதி (நாளை) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது முடிவுகள் வெளியாகும் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி ஜூன் 17-ம் தேதி (நாளை) வெளியிடப்படும்; அதைத் தொடர்ந்து, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 23-ம் தேதி வெளியாகும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்தது.
இதையடுத்து, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (17-ம் தேதி) வெளியாகும் என்று மாணவர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் தற்போது தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை ஜூன் 20-ம் தேதி காலை 9.30 மணிக்கும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை அன்று மதியம் 12 மணிக்கும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிடுவார்.
பொதுத்தேர்வு முடிவுகளை http://tnresults.nic.in, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in, http://dge.tn.gov.in என்ற இணையதள பக்கங்களிலும் மாணவ – மாணவியர் தெரிந்து கொள்ளலாம்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இந்த அறிவிப்பு, 17-ம் தேதி ரிசல்ட் வந்துவிடும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த மாணவர்களை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.
அத்துடன், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி தள்ளிப்போவதால், 11-ம் வகுப்பிற்கு பள்ளிகள் திறப்பு தாமதமாகலாம் எனத் தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *