சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனையில் வெற்றி பெற்ற தொமுச நிர்வாகிகள் தொழிலதிபர் மருது பாண்டியனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனையில் சில தினங்களுக்கு முன்பு தொமுச நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தலைவராக அமிர்தராஜ், செயலாளராக பாலசுப்பிரமணியன், பொருளாளராக பாலமுருகன், துணைச் செயலாளராக தங்கராஜ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற நிர்வாகிகள் அனைவரும் சோழவந்தான் தொழிலதிபரும் கலைவாணி மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளருமான மருதுபாண்டியனை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர். இதில் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.