மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி தமிழக வெற்றி கழகம் சார்பாக கொள்கை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் பொதுமக்கள் மாற்று கட்சியினர் இணையும் விழா நடைபெற்றது. வாடிப்பட்டியில் தாதம்பட்டி நீரேத்தான் மந்தை திடலில் நடந்தது. இந்தக் கூட்டத்துக்கு மதுரை வடக்கு மாவட்ட தலைவர் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் விஜய் அன்பன் கல்லானை தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். வழக்கறிஞர் தியாகராஜன் கே.எஸ்.செல்வா, திலீபன், விஜய் ஹரிஷ், ரஞ்சித்குமார், பெட்டராஜ், ஈஸ்வரன், பாண்டி, பாலா, மோகன், ஜோதி கண்ணன், உசிலை ராஜேஷ் கண்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆண்டனி வரவேற்றார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் கல்லானை விஜய் அன்பன் முன்னிலையில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., உள்ளிட்ட கட்சியினர் 200 பேரும், புதிய உறுப்பினர்கள் 300 பேரும் தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்தனர். இந்த கூட்டத்தில் சோழவந்தான் பேரூர் பொறுப்பாளர்கள் பாண்டி மாணிக்கம், ஆர்.கே.ராஜ், தனசேகரன், அசோக் உள்பட 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பசுமணியன் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியை வடக்கு மாவட்ட நிர்வாகி முனாப் தொகுத்து வழங்கினார்.
