மாசிமகத்தன்று பிரசித்திபெற்ற புண்ணிய தலங்களில் உள்ள ஆறு, கடல், குளம் போன்ற தீர்த்தங்களில் நீராட வேண்டும். ராமேஸ்வரம், தஞ்சை மாவட்டம் திருவையாறு, கும்பகோணம், நாகை மாவட்டம் வேதாரண்யம் போன்ற இடங்களில் நீராடி தர்ப்பணம் பிதுர்க்கடன் செய்வதன் மூலம் பித்ரு தோஷம் நீங்கும். பித்ரு தோஷ நிவர்த்திக்கு அருமையான பரிகார தினம் மாசிமகம்.
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று மாசி மகத்தை முன்னிட்டு சுப்பிரமணியசாமியும் தெய்வயானையும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வண்ண மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காட்டி பக்தர்கள் முன் வலம் வந்து அருள்பாலித்தார்.பக்தர்கள் அனைவரும் சகண கோஷம் முழங்க சுப்பிரமணியாசுவாமியை தரிசித்தனர்.