தியாகராசர் பொறியியல் கல்லூரியின் கட்டிடக்கலை துறை மற்றும் Place Making இணைத்து வழங்கிய மாணவர்களின் வடிவமைப்புக் கண்காட்சி துவக்க விழா கட்டிடக்கலை துறையின் காட்சிகூடத்தில் இனிதே நடைபெற்றது.
திறப்பு விழாவின் சிறப்பு விருந்தினர் திரு. சு. வெங்கடேசன், பாராளுமன்ற உறுப்பினர், மதுரை, அவர்களால் இனிதே துவக்கிவைக்கப்பட்டது. மதுரை மாநகரை உருவாக்குவதில் பொது மக்களின் ஒத்துழைப்பு, கல்வி நிறுவனங்களின் சமூக முயற்சிகள் மற்றும் ஆளும் குழுக்களின் பங்கு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை கௌரவ விருந்தினர் வலியுறுத்தினார்.
மதுரை மதுரை மாநகரில் பல தசாப்தங்களாக தியாகராசர் பொறியியல் கல்லூரி செய்துவந்துள்ள தொடர்ச்சியான ஆய்வு முயற்சிகளையும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சிக்கு தியாகராஜர் பொறியியல் கல்லூரியின் தலைவர் மற்றும் நிறுவனருமான திரு. க. ஹரி தியாகராஜன் தலைமை வகித்து தனது உரையில் மதுரை மாநகரின் பாரம்பரியத்துடன் நெருக்கமாகப் பிணைந்துள்ள புராணக் குறிப்புகள், கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் முக்கியத்துவத்தை மேற்கோள் காட்டினார்.
கோவில் நகரமான மதுரையில் சமூகத்திற்கான பொது இடங்களை வடிவமைப்பதின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார்.
திருமதி.வினீதா ஷெட்டி ஒருங்கிணைப்பாளர்-Place making India – சர்வதேச அமைப்பானது, கோவில் நகரங்களை உருவாக்குதல் என்ற கருப்பொருளின் அடிப்படையில் மதுரையில் நடைபெற்ற “Place Making Week – India 2024” பயிலரங்கத்தின் நோக்கங்கள் மற்றும் முக்கியத்துவம் குறித்து கூட்டத்திற்கு விளக்கினார்.
தியாகராஜர் பொறியியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர்.எம்.பழனிநாத ராஜா, தியாகராஜர் பொறியியல் கல்லூரியின் கட்டிடக்கலைத் துறைத் தலைவர் டாக்டர் ஜினு லூயிஷிதா கிட்ச்லி ஆகியோர் முறையே வரவேற்புரையும், நன்றியுரையும் வழங்கினர்.