தமிழ்நாடு அரசு ரேசன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக, விவசாயிகளிடமிருந்து தேங்காய் மற்றும் கடலை, எள் -யை கொள்முதல் செய்து தேங்காய் எண்ணெய் மற்றும் கடலை எண்ணெய், நல்லெண்ணெய் விநியோகம் செய்ய கோரி தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் 18 மாவட்டங்களில் இன்று விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில இணைச் செயலாளர் நேதாஜி தலைமையிலான விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மனிதர்களுக்கு கேடு விளைவிக்கும் பாமாயிலை தவிர்த்து இயற்கையான எண்ணெய்களை நியாய விலை கடைகளில் வழங்க வேண்டும் என கோசங்கள் எழுப்பி சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர்.
சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளை உசிலம்பட்டி டிஎஸ்பி நல்லு தலைமையிலான போலிசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் வைத்துள்ளனர்.