தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் காரியாபட்டி கிளை சார்பில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடை பெற்றது. தற்போது கடுமையான வெப்பத்தால் மக்கள் மிகவும் பாதிக்கப் பட்டு வருகின்றனர். இதனால் நாட்டில் நல்ல மழை பெய்ய வேண்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பில் மாவட்டந்தோறும் சிறப்பு தொழுகை நடந்தது. காரியாபட்டி யில் இன்று காலை 7 மணிக்கு நடைபெற்ற தொழுகை யில் ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.