• Fri. May 10th, 2024

லாடனேந்தல் கிராமத்தில் ஒரே நாளில் ஏழு கோவில்களில் மகா கும்பாபிஷேக விழா

Byகுமார்

Apr 27, 2024

மதுரை அருகே லாடனேந்தல் கிராமத்தில் ஒரே நாளில் ஏழு கோவில்களில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

வேலம்மாள் கல்விக் குழும தலைவர் முத்துராமலிங்கம் மற்றும் லாடனேந்தல் – பாப்பாங்குளம் கிராம பொதுமக்கள் சார்பில் ஏழு திருக்கோயில்களில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ஆயிரகணக்கான பக்தர்கள சாமி தரிசனம் செய்தனர்.

மதுரை அருகே லாடனேந்தல் கிராத்தில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ விரமாகாளி அம்மன், ஸ்ரீ அய்யனார், ஸ்ரீ காமாட்சி அம்மன், ஸ்ரீ முத்தையா சுவாமி, ஸ்ரீ ஊர்க்காவலன், ஸ்ரீ முனியாண்டி திருக்கோயில்களில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் சித்திரை மாதம் 13ம் தேதி (26.04.24) வெள்ளிக்கிழமை இன்று காலை 5.30 மணி முதல் 10 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கடந்த 24ம் தேதி காலை சிவாச்சார்யார்கள் முன்னிலையில் விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், வாஸ்த்து சாந்தியுடன் பூஜை துவங்கி தொடர்ந்து மூன்று நாட்கள் யாகசாலையில் பூஜைகள் நடைபெற்றன. இன்று காலை விக்னேஸ்வர பூஜை, புன்யாஹவாசனம், நான் காம் கால பூஜை பூர்ண ஹீதியுடன் முடிவு பெற்று, யாக சாலையிலிருந்து பூரண கும்பங்கள் சிவாச்சாரியர்கள் முன்னனிலையில் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களில் அபிஷேகம் செய்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக நிகழ்ச்சியை காண மதுரை ,சிவகங்கை, திருப்புவனம் உள்ளிட்ட ஊர்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வேலம்மாள் கல்விக் குழம தலைவர் முத்துராமலிங்கம் மற்றும் லாடனேந்தல் – பாப்பாங்குளம் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *