• Sat. Apr 18th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Apr 28, 2024

தேவையில்லாமல் நீ தடுமாறும்..
ஒவ்வொரு கனமும் உன் தடம் மாறும்..!

எதிரிகளாலும் நிராகரிக்க முடியாத
தகுதிகளை வளர்த்துக் கொள்..
அதற்காகவே உன்னை தயார்படுத்து..
அதுவே தலை சிறந்த உருவாக்கம்..!

நீ செய்யும் ஒரு சில செயல்கள்
விரைவாய் செய்து முடிக்கப்பட
வேண்டியவை அல்ல.. நிறைவாய்
செய்து முடிக்கப்பட வேண்டியவை..!

ஒருவரின் முதிர்ச்சி அவர் எவ்வளவு
வயதில் உள்ளார் என்பதில் இல்லை..
எவ்வளவு அனுபவத்தையும்
அறிவையும் கொண்டிருக்கிறார்
என்பதில் தான் இருக்கிறது..!

வாழ்வில் அனைத்தையும்
இழந்த பிறகு உன்னோடு யார்
இருக்கின்றார்களோ.. அவர்களே
உனக்கானவர்கள்..!