• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டியில் இயக்குநர் மணிகண்டன் வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பல்

ByP.Thangapandi

Feb 13, 2024

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி எழில் நகரைச் சேர்ந்தவர் இயக்குனர் மணிகண்டன். காக்கா முட்டை, கடைசி விவசாயி உள்ளிட்ட தேசிய விருது பெற்ற படங்களை இயக்கிய மணிகண்டன் தற்போது பட வேலைக்காக குடும்பத்துடன் கடந்த 2 மாதங்களாக வசித்து வருகிறார்.

இந்நிலையில் பூட்டி இருந்த இவரது வீட்டில் கடந்த 8ஆம் தேதி மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பிரோவில் இருந்த கடைசி விவசாயி திரைப்படத்திற்காக மத்திய அரசால் வழங்கப்பட்ட இரு தேசிய விருதுக்கான வெள்ளி பதக்கங்கள், 1 லட்சம் ரொக்கம் மற்றும் 5 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்றனர்.

பிரபல இயக்குனர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலிசார் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் இன்று மணிகண்டன் வீட்டில் பாலித்தீன் பையில் ( அய்யா எங்களை மன்னித்து விடுங்கள் உங்கள் உழைப்பு உங்களுக்கு ) என்ற மன்னிப்பு கடிதத்துடன் தேசிய விருதுக்கான வெள்ளி பதக்கங்களை மட்டும் கொள்ளை கும்பல் தொங்க விட்டுச் சென்றுள்ளனர்.

தகவலறிந்து விரைந்து வந்த போலிசார் தேசிய விருதுக்கான பதக்கங்களை கைப்பற்றி தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.