புதுக்கோட்டை,ஆத்மா யோகா மையம் சார்பாக 25-ஆம் ஆண்டு தமிழ்நாடு புதுச்சேரி அளவிலான யோகாசன வாகையர் போட்டி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் திருநெல்வேலி, கோயம்புத்தூர், திருவள்ளூர், சென்னை, ராமநாதபுரம், தஞ்சாவூர், கரூர், சிவகங்கை, விருதுநகர், மதுரை உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் ஆத்மா யோகா மைய நிறுவனர் யோகாச்சாரியார் ரெ. பாண்டியன் வரவேற்புரை ஆற்றினார். புதுக்கோட்டை தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு தொழில் முறைத் தகுதி பதிவு பெற்ற யோகா ஆசிரியர்கள் நலச் சங்கத்தின் தலைவர் கரூர் டாக்டர் மாதவன் , விஜய் குழுமத்தின் தலைவர் முருகானந்தம், பேக்கரி மகாராஜ் அருண் சின்னப்பா , ரோட்டரி மாவட்டம் 3000 முன்னாள் ஆளுநர் அ.லெ. சொக்கலிங்கம், பார்வதி ஜுவல்லரி முருகராஜ், நெல்லு மண்டித் தெரு புவனேஸ்வரி ஜூவல்லர்ஸ் வெங்கடேசன், பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர் பாலகிருஷ்ணன் , ஜியோ பேலஸ் நிறுவனத் தலைவர் மணிவண்ணன், அகில பாரத ஐயப்பா சேவா சங்க மாவட்டச் செயலாளர் ACS, ஐயப்பன். வைத்தூர் ஆனந்தகுமார், பிரசாத், கவிஞர் முருகபாரதி, ஸ்ரீராம், சுப்பையா, கண்ணதாசன், தமிழகன், குகா .விஜயன், சங்கரநாராயணன், ஆடிட்டர் இளங்கோ, ரொட்டேரியன் பாண்டியன் ஆகியோ கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களை பரிசுகள் வழங்கி வாழ்த்தினார்கள்.
வாகையர் பட்டம் பெற்ற கும்மிடிப்பூண்டி வினஸ்ரீ யோகா சென்டர் மாணவன் ஹரீஷ், கரூர் பரணி வித்யாலயா மாணவி யாழினி ஆகியோர் வின்னர் கோப்பையுடன் தங்க நாணயம் வென்றார்கள். திருச்சி அறம் யோகா சென்டர் மாணவி தஷ்விகா ஸ்ரீ , கரூர் பரணி பார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவன் சூர்யா ஆகியோர் ரன்னர் வெற்றிக் கோப்பையுடன் சைக்கிள்களைப் பரிசாக வென்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் , மேனாள் விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு டாக்டர் சி.விஜயபாஸ்கர் பரிசுகளை வழங்கி வாழ்த்திப் பேசினார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஆத்மா யோகா மையத்தின் மாணவர்கள் வானதி,சபரி லட்சுமி,அபிராமி, லதா, ஜாபர், வித்யா, ஜெகன், சஞ்சித் பாபு , சுஜித் பாபு , விக்னேஷ், கர்னேஷ் ஆசிரியர் சுரேஷ் , ஜெபக்கனி மற்றும் பெற்றோர்கள் மாணவ மாணவிகள் செய்திருந்தார்கள். கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் தர அடிப்படையில் 100% பரிசுகள் வழங்கப்பட்டது நிறைவாக ஆத்மா யோகா மையத்தின் செயலாளர் யோகா புவனேஸ்வரி பாண்டியன் |நன்றி கூறினார்.








