• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பள்ளி மாணவர் இறப்பில் மர்மம் போலீசார் தீவிர விசாரணை..,

ByKalamegam Viswanathan

Sep 8, 2026

மதுரை கூடல்நகர் கருப்புசாமி யோகலட்சுமி மகன் தமிழ்ச்செல்வன் வயது 16 அரசு உதவி பெறும் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு மாணவர் இவர் நேற்று முன்தினம் காலை கிரிக்கெட் விளையாடுவதற்கு சென்றவர் இரவாகியும் வீட்டுக்கு திரும்பவில்லை.

இது குறித்து கூடல் புதூர் காவல் நிலையத்தில் புகார் செய்த நிலையில் நேற்று காலை ஆனையூர் கழிவு நீர் ஏற்ற நிலையம் அருகே காயங்களுடன் மரணம் அடைந்து இருந்தார். இறந்த மாணவரின் உடலில் காயங்கள் இருந்ததால் இது கொலையா என போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர்.