சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம்.வீ.கருப்பையா சட்டமன்றத் தில் மானிய கோரிக்கையின்போது பேசியதாவது:- உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு,அவனி யாபுரத்தில் பாரம்பரிய கிராமிய விளையாட்டுகளை மேம்படுத்த ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்திட ரூ.15 லட்சமும், அதில் உயிரிழப்பவர்களுக்கு ரூ.10லட்சமும், கடுமை யான காயமடைபவர்களுக்கு ரூ.2 லட்சமும்முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் வழங்கப்படும் என்று அறிவித்ததற்கு நன்றி தெரிவித்து க் கொள்கிறேன்.

மதுரை, திண்டுக் கல்,தேனி,விருதுநகர்,ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு பெரியாறு அணை கட்டி வாழ்வளித்த கர்னல் பென்னிகுக் நினைவு இல்லம் இருந்த இடத்தில் கலைஞர் நூற்றா ண்டு நூலகம் கட்டப்பட்டுள்ளது அதற்கு பென்னிகுக் பெயர் சூட்ட வேண்டும். சமயநல்லூர் துணை கண்காணிப்பாளர் சரகத்துக்கு உட்பட்ட காவல் நிலையங்களின் தரம் உயர்த்த வேண்டும்.
வாடிப்பட்டி, சோழவந்தான், அலங்காநல் லூர் காவல் நிலையங்களில் அடிப் படை வசதிகள் செய்து தூய்மை பணியாளர்கள் நியமனம் செய்ய வேண்டும். மேலும் அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் காவலர் குடியிருப்பு கட்டி தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.








