• Mon. Apr 28th, 2025

பூஜித குரு பால பிரஜாபதி அடிகளார் கடும் கண்டனம்..,

அய்யா வழி வழிபாட்டு அமைப்பின் பூஜிதகுரு பால பிரஜாபதி அடிகளார் இன்று மாலை (ஏப்ரல்_12) சுவாமி தோப்பில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அடிகளாரின் பேட்டியில் மாறுபட்ட இரண்டு கோரிக்கைகளை வெளிப்படுத்தினார்.

சைவம், வைணவம் என்ற அமைசர் பொன்முடியின் பேச்சில் ஆபாசம் மட்டுமே வெளிப்பட்டது. பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து முதல்வர் உடனே நீக்க வேண்டும். கட்சி பதவியில் இருந்து நீக்கிய தளபதிக்கு நன்றி. ஆபாசப் பேச்சுக்கு சரியான தண்டனை பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து உடனே அகற்றவேண்டும்.

அடிகளார் அடுத்து சொன்னது. கேரள மாநிலத்தில் இருந்து பிரித்து வந்து குமரி மை எங்கள் மண் என்ற உறவில் வாழ்கிற,குமரிமாவட்டத்திற்கென்று ஒரு அமைச்சர் இல்லாதது வேதனை தருகிறது.

அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட மனோ தங்கராஜ்க்கு மீண்டும் அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும். மனோ தங்கராஜ்யை எதற்காக அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினோம் என்பதற்கு இதுவரை முதல்வர் காரணம் சொல்லவில்லை.!?

குமரி மாவட்டத்திற்கு இந்த மண்ணின் மைந்தரை அமைச்சர் ஆக்கவேண்டும். மாவட்ட பொறுப்பு அமைச்சரான தங்கம் தென்னரசிடம் போய் நாங்கள் எங்கள் கோரிக்கையை வைக்க முடியாது. அதற்கான உரிமையும் நமக்கு கிடையாது. ஏன் என்றால் அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு நாம் வாக்களிக்கவில்லை என தெரிவித்த அடிகளார்.

திமுகவின் தேர்தல் அறிக்கை ஒவ்வொரு மாவட்டத்திற்கென்று,தனித் தனியாக தயாரிக்கப்பட்டது. திமுக வின் அறிக்கையில் குமரி மாவட்டத்தில் அய்யா வைகுண்டர் பெயரில் ஆய்வு மையம் அமைப்போம் என தெரிவித்திருந்தது. நான்கு ஆண்டுகள் கடந்து விட்டது இன்று வரை அதற்கான எந்த பணியும் தொடங்கவில்லை.

வைகுண்டர் இயல்பாக பனை ஏறும் வம்சத்தில் பிறந்தவர். என்றாலும். அய்யா வைகுண்டர் அவரது சக பனையேறும் தொழிலாளிகள் எவரும் கள் இறக்கக்கூடாது,கள் விற்பனை செய்யக்கூடாது என்பதில் மிகுந்த கட்டுப்பாட்டுடன் இருந்தார்.

அய்யாவின் ஜென்ம தினம் நாளில் தமிழகம் முழுவதும் மது விற்பனைக்கு தடைவிதிக்க வேண்டும் என்ற எங்களின் பல்லாண்டு கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றவில்லை. அய்யாவின் ஜென்ம தினத்தில் குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டத்திற்கு அரசு விடுமுறை அனுமதித்துள்ளது. இந்த விடுமுறை விருதுநகர் மாவட்டத்திற்கும் விட வேண்டும் என்ற எங்களின் கோரிக்கை அரசால் இன்று வரை பரிசீலனையில் இல்லை.

அய்யாவின் மக்களின் சமத்துவம்,மனிதர்களில் உயர்ந்த, தாழ்ந்த சாதி இல்லை, இறைவன் முன் அனைவரும் சமம் என்ற கருத்தை பள்ளி பாடப் புத்தகத்தில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை கவனிக்கப்படாமல் இருக்கிறது. அண்டை மாநிலமான கேரளாவில் அய்யாவின் போதனைகள் பள்ளி பாடத்தில் சேர்க்கப்பட்டு பள்ளியில் பயிலும் பிள்ளைகளுக்கு பயிற்றுவிக்கப்படுகிறது.

திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியின் போது அய்யா வைகுண்டரை கைது செய்து திருவனந்தபுரம் வரை இழுத்து சென்ற. இப்போதைய கன்னியாகுமரி_திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலைக்கு, அய்யா வைகுண்டர் தேசிய நெடுஞ்சாலை என பெயர் மாற்ற வேண்டும் என பல முறை முயன்ற நிலையில் இதுவரை இந்திய தேசிய நெடுஞ்சாலை துறை கண்டுகொள்ளாது இருக்கிறது.எங்கள் கோரிக்கை 12 ஆண்டுகளாக ஒன்றிய நெடுஞ்சாலைத் துறையின் காதுகள் கேட்கா காதுடன் இருக்கிறது.

தமிழக அரசின் நிர்வாகத்தின் கீழுள்ள அனைத்து கோயில்களிலும் தமிழ் வழி வழி பாட்டினை மேம்படுத்த வேண்டும்.

அண்மை காலமாக தமிழகத்தில் தீண்டாமை தலை தூக்கிவருகிறது. இதனை முழுமையாக தடுக்க தமிழக அரசு தீண்டாமை வாரியம் ஒன்றை அமைக்க வேண்டும் என அடிகளார் தெரிவித்தார்.