



வசந்த் அன்கோ நிறுவனர் வசந்த குமார் சிந்தனையில் தோன்றிய அவரது சொந்த நிறுவனத்தின் பணிக்கான தேர்வு முகாம் பின்னாளில். வசந்த் அன்கோ நடத்தும் வேலை வாய்ப்பு முகாம் பொது மக்களின் மத்தியில் மட்டும் அல்ல,வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்க செய்யும் வழிகாட்டியாகவும் இருந்தது.

வசந்த குமார் வாழ்ந்த காலத்தில் 5_வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி பல ஆயிரம் பேர் வாழ்வில் ஒளி ஏற்றினார். தந்தையின் மறைவுக்குப் பின்னரும் தந்தை வழியில். விஜய் வசந்தின் நேரடி கண்காணிப்பில் நாகர்கோவில் நடக்கும் இரண்டாவது வேலை வாய்ப்பு முகாம் என்ற நிலையில். வசந்த் அன்கோ நடத்தும் 7_வது வேலைவாய்ப்பு முகாம் இது.

கடந்த முகங்களின் மூலம் ஐடி மற்றும் தனியார் நிறுவனங்கள், வசந்த் அன்கோவிற்கான பணியாளர்கள் என இதுவரை 5000_ம் பேர் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர்.
சுங்கான் கடை புனித சவேரியார் பொறியியல் கல்லூரியில் இன்று காலை தொடங்கிய வேலை வாய்ப்பு முகாமை கல்லூரி தாளாளர் அருட் பணி தந்தை காட்வின் ஜெபித்து தொடங்கி வைத்தார்.
இன்றைய முகாமில் 40_க்கும் மேலான நிறுவனங்கள் வந்துள்ளனர். கடந்த ஒரு வார காலத்திற்கு மேல் வெளியிட்ட வேலைவாய்ப்பு முகாம் பற்றிய விளம்பரத்தை பார்த்து 1000_க்கும் அதிகமான இளைஞர்கள், இளம் பெண்கள் அவர்களது கல்வி சான்றுகளுடன் நேர்முக பணி தேர்வில் பங்கேற்றுள்ளார்கள்.

