


கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள வான் தொடும் உயரத்தில் வள்ளுவர் சிலையை 2000_ம் ஆண்டில் அன்றைய முதல்வர் கருணாநிதி திறந்தது வைத்தார். திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டதின் 25_வது ஆண்டு விழாவின் அடையாளமாக இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த கண்ணாடிப் பாலம் பற்றிய தகவல், இந்தியாவின் எட்டு திசையும் ஒலித்தது.

கன்னியாகுமரி என்றாலே ஒரு சர்வதேச சுற்றுலா பகுதி என்பதால் நாள் ஒவ்வொன்றுக்கு குறைந்தது 10_ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்த நிலையில். இன்றைக்கு கன்னியாகுமரி கடலில் கண்ணாடிப் பாலம் திறந்த பின் தினம், தினம் வரும் சுற்றுலா பயணிகள் அதிகரித்தது மட்டும் அல்ல. இந்தியாவின் தென் கோடி குமரி முனையில்
இன்று கண்ணாடிப் பாலம் ஒரு புதிய அடையாளமாக மாறியுள்ளது.

கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள கண்ணாடி கூண்டு பாலம் ஆய்வு பணி மற்றும் பராமரிப்பு பணி வரும் 15ம்தேதி முதல் 19 ம்தேதி வரை நடைபெற உள்ளதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை-(5 நாட்களுக்கு) கண்ணாடி பாலத்திற்கு பொதுமக்கள் செல்ல அனுமதிக்க படமாட்டார்கள் எனவே கன்னியாகுமரிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் இதை கருத்தில் கொண்டு தங்களுடைய பயணத்திட்டத்தை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்.அழகுமீனா தகவல்.

