• Wed. Dec 11th, 2024

ஹோட்டல்களில் உணவு தரம் இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்..,
அமைச்சர் ராஜகண்ணப்பன் எச்சரிக்கை..!

Byவிஷா

Jan 29, 2022

தமிழ்நாட்டில் உள்ள எந்த ஹோட்டல்களாக இருந்தாலும் உணவுகள் தரமாக இருக்கவேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. குற்றச்சாட்டுகள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.


சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது புதிய பேருந்து நிலையம் கட்டுவது தொடர்பாக நிருபர்கள் கேட்டதற்கு பதிலளித்த அவர்..,


தேர்தல் சமயங்களில் அரசு வேலைகளை பற்றி கேள்வி கேட்கக் கூடாது. தேர்தலுக்குப் பிறகுதான் பணிகள் தொடங்கும். நடுவில் சில பணிகள் நடக்கும். ஆனால், அதற்கு தற்போது பொறுப்பாக சொல்ல முடியாது. தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் முழுமையாக எதையும் வெளியில் தெரிவிக்க முடியாது.

நெடுஞ்சாலைகளில் உள்ள தரமற்ற ஹோட்டல்கள் குறித்து கேட்டதற்கு, குற்றச்சாட்டுகள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். எந்த ஹோட்டல்களாக இருந்தாலும் உணவுகள் தரமாக இருக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்று தெரிவித்தார்.