தமிழகத்தில் உள்ள எண்ணூர், நாகை, பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வட கிழக்கு வங்கக் கடலில் ஒரு காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி சனிக்கிழமை உருவானது. இது ஞாயிற்றுக்கிழமை வலுவடைந்து, ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வுப் பகுதியாக வட மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளது.
வங்கக்கடலில் வலுவடைந்துள்ள ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி காரணமாக, வட மேற்கு வங்கக்கடல், மேற்கு வங்கம் மற்றும் ஒடிஸா கடலோரப் பகுதிகள், வட ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தத நிலையில், தமிழகத்தில் உள்ள எண்ணூர், நாகை, பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.