• Tue. Dec 10th, 2024

கால்நடை மருத்துவமனையில் அடிதடி… வீடியோ வைரலாகி பரபரப்பு…

கால்நடை மருத்துவமனையில் அடிதடி… பதறிய மருத்துவர் மற்றும் ஊழியர்கள்.. விவசாயியை தாக்கிய நபருக்கு பளார் பளார்…. வீடியோ வைரலாகி பரபரப்பு…

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த மங்களம் அருகே உள்ள மூணு மடை பகுதியில் கால்நடை மருந்தகத்துடன் மருத்துவமனை கிளையாக செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் இன்று அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி அப்பு குட்டி என்பவர் அவரது மாடு ஒன்றை ஊசி போடுவதற்காக அழைத்து வந்துள்ளார். அப்போது அறிவொளி நகர் பகுதியைச் சேர்ந்த பாபா பத்து ரூதீன் என்ற நபர் பூனைகளை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்துள்ளார். அப்போது அப்பு குட்டி என்பவரின் மாடு ஊசி செலுத்த மருத்துவர் முயற்சித்த போது முதலில் பூனை குட்டையை பாருங்கள் என்று மருத்துவர் மற்றும் ஊழியர்களை கூறி அவசரப்படுத்தியதாக தெரிகிறது.

அதனைத் தொடர்ந்து வாக்குவாதம் முற்றிய நிலையில் பக்ருதீன் விவசாயியை முதலில் தாக்கியதாகவும் பிறகு அதனை தடுக்கச் சென்ற முத்துசாமி என்பவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது இதில் காயமடைந்த அப்புகுட்டியை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வீடியோவாக எடுத்து தற்போது அதனை சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது இதில் பலத்த காயமடைந்து ரத்தம் சொட்ட சொட்ட அப்புகுட்டி என்ற விவசாயி மற்றும் மருத்துவர் காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கவே காவலர்கள் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இச்சம்பவம் இப்பகுதியில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.