• Thu. Dec 12th, 2024

குக்கர் மூடியால் அடித்து ஆண் கொலை…

பல்லடம் அருகே குக்கர் மூடியால் அடித்து ஆண் கொலை செய்யப்பட்ட கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பொள்ளாச்சி உடுமலை சாலை பிரிவில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று தலையில் காயத்துடன் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றது. தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் கொலை செய்யப்பட்டவர் யார் என்பது குறித்தும் கொலையாளிகள் யார் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டனர். மேலும், சம்பவ இடத்திற்கு தடவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டையானது துவங்கப்பட்டது.

மேலும், போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபரின் பெயர் கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த சிஜி 40 என்பதும் இவர் பல்லடம் பகுதியில் லாரி கிளினராக வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது.

மேலும், அவர் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்கு அருகே தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடப்பதாகவும், அந்தப் பகுதியில் குக்கர் மூடி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ள தாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், சிஜி கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் 2 தனிப்படைகள் அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.