திருப்பூர் மாநகரம் மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மாநில துணைத்தலைவர் சையது மன்சூர் உசேன், பொதுக்குழு உறுப்பினர் வி.எஸ் கோவிந்தராஜ் ஆகியோர் தலைமையில் கட்சியினர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் லட்சுமியை நேரில் சந்தித்து புகார் மனுவினை அளித்துள்ளனர். இந்த நிகழ்வில் மாநில செயற்குழு உறுப்பினர் கண்ணன் , வடக்கு சட்டமன்ற தொகுதி செயலாளர் ஜெயமுருகன், தலைவர் பொன்னுச்சாமி , தெற்கு சட்டமன்ற தொகுதி செயலாளர் தங்கராஜ் , தலைவர் ரமேஷ் , பல்லடம் சட்டமன்ற தொகுதி செயலாளர் மணி கண்ணன் , வழக்கறிஞர் பிரிவு தலைவர் சபாஷ் , பல்லடம் காளியப்பன், ஜே. பி ராஜேந்திரன், புருஷோத்தமன், மாதப்பூர் கோவிந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர்.