

அமெரிக்காவிலுள்ள நியூயார்க் சிட்டியின் சென்ட்ரல் பார்க்கில் (Central Park) இருக்கும் சிறுவர்களுக்கான விளையாட்டுப் பகுதியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினின் சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
சிவப்பு நிறத்திலான அந்தச் சிலையை அமைத்தவர் பிரெஞ்சுக் கலைஞர் ஜேம்ஸ் கொலொமினா (James Colomina). புதின் சிறியதொரு போர் டாங்கியின் மேல் அமர்ந்திருப்பதைப் போல் வடிவமைக்கப்பட்ட அந்தச் சிலையைப் படமெடுத்துத் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றினார் கொலொமினா. போரின் முட்டாள்தனத்திற்குக் கண்டனம் தெரிவிக்கவும் அத்தகைய வன்முறையான, பேரிடர்ச் சம்பவங்களில் சிறுவர்கள் வெளிப்படுத்தும் தைரியத்தை எடுத்துக்காட்டவும் அந்தச் சிலை உருவாக்கப்பட்டதாகக் கொலொமினா சொன்னார்.ரஷ்யா-உக்ரேன் மீது படையெடுத்து ஐந்து மாதங்கள் கடந்துவிட்டன. இந்நிலையில் அந்தச் சிலை உருவாக்கப்பட்டதாக கூறுகிறார்.
