

சிவகாசியில் நடைபெற்ற மாநில அளவிலான யோகாசனப்போட்டியில் சென்னை சகானா அணி வெற்றி பெற்றுள்ளது.
மாநில அளவிலான யோகாசன போட்டிகள் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்றது. தனியார் விளையாட்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த மாநில அளவிலான இப்போட்டியில் சென்னையில், மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். வயதின் அடிப்படையில், பல்வேறு யோகாசன பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில், சென்னையை சேர்ந்த சகானா யோகா பள்ளியின் ஆசிரியர் மீனா கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 60 மாணவர்கள் கலந்துகொண்டனர்.
சிரசாசனம், லகுக தண்டாசனம், அஷ்டவக்ரசனம் உள்ளிட்ட யோகாசனங்களை செய்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினர். பல்வேறு பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் சென்னை சகானா அணி வென்றது. இதில் குறிப்பாக சகனா அணியின் மாணவர் ஸ்ரீமதி யோகா உலக சாதனையிலும் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடதக்கது மேலும் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. யோகாசனம் மனதிற்கும், உடலுக்கும் புத்துணர்ச்சி அளிப்பதாகவும், உடலில் ஏற்படும் நோய்களுக்கு மருந்தாக விளங்குவதாகவும் சகானா யோகா பள்ளியின் ஆசிரியர் மீனா கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
