

செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழாவில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி பங்கேற்க இருப்பதாக தகவல் வெளிவந்த நிலையில், தற்போது அவர் நிறைவு விழாவில் கலந்து கொள்ளவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளது.
பிரம்மாண்டமான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் கடந்த ஜூலை 28ஆம் தேதி சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் கோலாகலமாக தொடங்கியது. இதற்கான தொடக்க விழா சென்னை நேரு விளையாட்டு அரங்கில் அரங்கம் அதிர நடைபெற்றது. இதனையடுத்து நேரு உள்விளையாட்டு அரங்கில் 10 ஆம் தேதி நிறைவு விழா நடைபெறும் எனவும் கூறப்பட்டிருந்தது. இந்தநிலையில் செஸ் ஒலிம்பியாட் நிறைவு நாள் நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி கலந்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் தோனி ரசிகர்கள் உற்சாக ஆட்டம் போட்டனர். ஆனால், தோனி வெளிநாட்டில் இருப்பதால் செஸ் ஒலிம்பியாட் நிறைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தோனி ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழந்துள்ளனர்.
