
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே மங்களா கோவிலில் நடைபெற்ற மாநில அளவிலான இருபாலருக்கான கபடி போட்டி நடைபெற்று வந்த நிலையில் ஆண்களுக்கான கபடி போட்டியில் முதல் பரிசை தட்டி தூக்கிய தஞ்சாவூர் பிரிஸ்ட் யுனிவர்சிட்டி அணியினர், பெண்களுக்கான கபடி போட்டியில் முதல் பரிசைசென்னை தமிழ்நாடு காவல்துறை அணியினர் தட்டிச் சென்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே மங்களா கோவிலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கந்தர்வகோட்டை தெற்கு ஒன்றிய திமுக சார்பில் மங்களா கோவில் கலைஞர் அரங்கத்தில் மாநில அளவிலான இரு பாலருக்கான கபடி போட்டி நடைபெற்று வந்தது. இந்த கபடி போட்டியினை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்தப் போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 40கும் மேற்பட்ட அணி விளையாட்டு வீர வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிக்காட்டினர். ஆட்டத்தின் இறுதி போட்டியை இன்று தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சி.வ.வீ மெய்யநாதன் தொடங்கி வைத்தார். இதில் ஆண்களுக்கான கபடி போட்டியில் தஞ்சாவூர் பிரிஸ்ட் யுனிவர்சிட்டி அணியினருக்கு முதல் பரிசான ரூபாய் ஒரு லட்சத்து ஐம்பதாயிரத்தை தட்டிச் சென்றனர்.

அதேபோன்று பெண்களுக்கான மாநில அளவிலான கபடி போட்டியில் சென்னை தமிழ்நாடு காவல்துறை அணியினர் முதல் பரிசான ஒரு லட்சத்து ஐம்பதாயிரத்தை தட்டிச் சென்றனர். பரிசுகளை மாவட்ட கழக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் வழங்கி சிறப்பித்தார். இந்த கபடி போட்டியை மங்களாகோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராம பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்று கண்டுகளித்தனர்.
