
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி இலுப்பூர் அருகே உள்ள ஆலத்தூர் ஊராட்சி குறிச்சிபட்டியில் அதிமுக நிர்வாகியின் இல்ல விழாவில் கலந்து கொண்டு இலுப்பூருக்கு சென்று கொண்டிருந்தபோது, குறிச்சிபட்டி பகுதியில் சிறுவர்கள் கோடை விடுமுறை என்பதால் பனமரத்தில் ஏறி நுங்கு வெட்டி சாப்பிட்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக சென்ற முன்னாள் அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர்.சி.விஜயபாஸ்கரை கண்ட சிறுவர்கள் கையசைத்து நுங்கு சாப்பிட அழைத்தார்கள். உடனே காரில் இருந்து இறங்கி சிறுவர்களிடம் எனக்கு ஒரு நுங்கு கொடுத்த தம்பி என்று கேட்டு வாங்கி சுவைத்து மகிழ்ந்ததோடு பழைய நினைவுகளையும் பகிந்து கொண்டார்.
அதுமட்டுமல்லாமல் அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்ற பொது மக்களுக்கும் நுங்கு வாங்கி கொடுத்து மகிழ்ந்தார். பின்னர் அங்கிருந்த சிறுவர்களை அழைத்து பனைமரம் ஏறிய சிறுவன், நுங்கு வெட்டி கொடுத்த சிறுவன் என அங்கிருந்த சிறுவர்கள் அனைவருக்கும் தல 100 ரூபாய் பரிசு கொடுத்து, பின்னர் அங்கிருந்த பெண்களிடம் நலம் விசாரித்தார்.
முன்னாள் அமைச்சர் ஒருவர் சிறுவர்களுடன் இணைந்து நுங்கு சாப்பிட்ட இந்த வீடியோவானது தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
