புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் மாநில உயர்மட்ட குழு கூட்டம் மற்றும் புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் அறிமுக விழா மாநிலத் தலைவர் சசிகுமார் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அறந்தாங்கி, ஆலங்குடி, ஆவுடையார் கோவில், இலுப்பூர், கறம்பக்குடி, குளத்தூர், புதுக்கோட்டை, பொன்னமராவதி, மணமேல்குடி, திருமயம், விராலிமலை உள்ளிட்ட வட்டங்களில் உள்ள தலைவர் செயலாளர் பொருளாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்தக் கூட்டத்தில் அரசு ஊழியர்கள் இயற்கையை மரணம் அடைந்தாலோ விபத்தில் மரணம் அடைந்தாலோ வங்கியின் மூலம் காப்பீடு தொகை வழங்க ஏற்பாடு செய்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர்கள் கல்வி தகுதியை பட்டப் படிப்பாக உயர்த்த வேண்டும் என்று நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.