• Sat. May 23rd, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

கோவை சிறுமி கொலை வழக்கு- அரசு மருத்துவமனையில் பலத்த போலீஸ் குவிப்பு..,

BySeenu

May 23, 2026

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட கார்த்தி, கால் முறிவு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரைச் சுற்றி இருபதுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஏதேனும் அவசர நிலை அல்லது சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாத வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றம் குறித்த கூடுதல் தகவல்களை சேகரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.